search icon
என் மலர்tooltip icon

    கார்

    புதிய AMG G63 விலையை திடீரென மாற்றிய மெர்சிடிஸ்
    X

    புதிய AMG G63 விலையை திடீரென மாற்றிய மெர்சிடிஸ்

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி விலையை மாற்றியது.
    • சமீபத்தில் இந்த மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் AMG G63 விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. தற்போதைய விலை உயர்வில் மெர்சிடிஸ் AMG G63 விலை தற்போது ரூ. 75 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மெர்சிடிஸ் AMG G63 விலை ரூ. 2 கோடியே 55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், தற்போது இதன் விலை ரூ. 3 கோடியே 30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மாதத்திலேயே மெர்சிடிஸ் நிறுவனம் தனது AMG G63 மற்றும் GLS மேபேக் 600 மாடல்களுக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது. முன்பதிவுகள் முதற்கட்டமாக மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நடைபெற்றது.

    மெர்சிடிஸ் AMG G63 மாடலில் 4.0 லிட்டர், டுவின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 577 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் G கிளாஸ் மாடல் G350d வெர்ஷனிலும் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×