search icon
என் மலர்tooltip icon

    கார்

    புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் டெலிவரி துவக்கம்
    X

    புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் டெலிவரி துவக்கம்

    • லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் இருவித என்ஜின்கள், நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலின் இந்திய விலை ரூ. 1 கோடியே 64 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்த ஆண்டு தனது மாடல்களை அப்டேட் செய்தது. இதில் 2022 ரேன்ஜ் ரோவர் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் அறிமுகமானது. இந்திய சந்தையில் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் இருவித என்ஜின், நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்த நிலையில், 2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலின் டெலிவரி இந்தியாவில் துவங்கி விட்டதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலின் விலை ரூ. 1 கோடியே 64 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலில் மிக மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், ஃபிலஷ் ஃபிட் டோர் ஹேண்டில்கள், கன்மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை புது மாடலில் 13.1 இன்ச் பிவி ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் 13.7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், பவர்டு கூல்டு/ஹீடெட் முன்புற இருக்கைகள், ஏர் பியூரிஃபயர், 23 ஸ்பீக்கர் கொண்ட மெரிடியன் ஸ்டீரியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்போர்ட் மாடல் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. செயல்திறனை பொருத்தவரை பெட்ரோல் என்ஜின் 394 ஹெச்பி பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டீசல் என்ஜின் 346 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் டெரைன் ரெஸ்பான்ஸ் 2 ஆஃப்-ரோடு ஹார்டுவேர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×