search icon
என் மலர்tooltip icon

    கார்

    திடீரென கரென்ஸ் மாடலை ரிகால் செய்த கியா - என்ன  காரணம் தெரியுமா?
    X

    திடீரென கரென்ஸ் மாடலை ரிகால் செய்த கியா - என்ன காரணம் தெரியுமா?

    • இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்பிவி மாடல் விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
    • கியா நிறுவனம் தனது வாகனங்களில் உள்ள பாகங்களை சீரான இடைவெளியில் ஆய்வு செய்து வருகிறது.

    கியா இந்தியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்பிவி மாடலின் 30 ஆயிரத்து 297 யூனிட்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. காரின் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஏற்பட்டு இருக்கும் பிழையை சரி செய்வதற்காக இந்த ரிகால் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்-ஐ திடீரென ஆஃப் ஆனதை போன்று மாற்றிவிடும் பிரச்சினை கியா கரென்ஸ் எம்பிவி மாடலில் ஏற்பட்டு இருக்கிறது. அதன்படி ரிகால் செய்யப்படும் கரென்ஸ் மாடல்களில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் சரிபார்க்கப்படுகிறது.

    கோளாறை சரி செய்வதற்கான மென்பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரச்சினையில் 2022 செப்டம்ர் முதல் பிப்ரவரி 2023 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    "பொறுப்புள்ள கார்ப்பரேட் என்ற அடிப்படையில், நிறுவனம் சார்பில் சீரான இடைவெளியில் உபகரணங்களை கியா சர்வதேச தரத்துக்கு இணையான முறையில் டெஸ்டிங் செய்து வருகிறது."

    "ரிகால் செய்யும் வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, தேவைப்படும் பட்சத்தில் இலவசமாக மென்பொருள் அப்டேட் வழஹ்கப்படும். கியா இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த பிரான்டு அனுபவத்தை வழங்குவதை குறிக்கோளாக வைத்து இருக்கிறது," என்று கியா இந்தியா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

    புதிய கோளாறில் பாதிக்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும். பாதிக்கப்பட்ட யூனிட்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கியா அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு, காரை சரி செய்வதற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    Next Story
    ×