search icon
என் மலர்tooltip icon

    கார்

    500 கிமீ ரேன்ஜ் வழங்கும் ஸ்கோடா எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
    X

    500 கிமீ ரேன்ஜ் வழங்கும் ஸ்கோடா எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

    • ஸ்கோடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஸ்கோடா எலெக்ட்ரிக் கார் 295 ஹெச்பி திறன் வெளிப்படுத்துகிறது.

    ஸ்கோடா நிறுவனம் தொடர்ச்சியாக தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலாக ஸ்கோடா என்யாக் RS iV இணைந்துள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட என்யாக் கூப் மாடல் RS iV வடிவில் கிடைக்கிறது.

    புதிய என்யாக் மாடல் 295 ஹெச்பி பவர், 460 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 2-மோட்டார் டிரைவ் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர் வரை செல்லும் என WLTP சான்று பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடல் குறைந்தபட்சம் 500 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

    ஸ்கோடா என்யாக் RS iV மாடலில் 82 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் டிராக்‌ஷன் மோட் கொண்டு எளிதில் வழுக்கும் சாலைகளிலும் பயணிக்க முடியும். RS மாடல் என்பதால் இந்த காரில் RS சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர 21 இன்ச் அலாய் வீல் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதில் உள்ள ஆட்-ஆன் பாகங்கள் ஹை-கிளாஸ் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ரேடியேட்டர் கிரில், விண்டோ ஃபிரேம், மிரர் கேப்கள், ரியர் டிப்யுசர், ஸ்கோடா லோகோ உள்ளிட்டவை அடங்கும்.

    இத்துடன் க்ரிஸ்டல் ஃபேஸ்- ரேடியேட்டர் கிரில் பகுதியில் 131 எல்இடி பேக்லிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஃபுல் மேட்ரிக்ஸ் ஹெட்லைட்கள், எல்இடி ரியர் லைட்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. RS மாடல் என்பதால் நான்-மெட்டாலிக் பெயிண்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×