search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் அறிமுகமான ஸ்கோடா ஸ்பெஷல் எடிஷன் கார்
    X

    இந்தியாவில் அறிமுகமான ஸ்கோடா ஸ்பெஷல் எடிஷன் கார்

    • ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புது மாடல் ஸ்கோடா குஷக் சீரிசில் இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆகும்.

    இந்தியாவில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் அசத்தல் சலுகை மற்றும் புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் ஸ்கோடா குஷக் ஆனிவர்சரி எடிஷன் இணைந்துள்ளது.

    ஏற்கனவே ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், ஆனிவர்சரி எடிஷன் குஷக் சீரிசில் இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் மாடலாக அமைந்துள்ளது. ஸ்கோடா குஷக் ஆனிவர்சரி எடிஷன்- கேண்டி வைட் மற்றும் கார்பன் ஸ்டீல் என இரண்டு விதமான நிறங்களில் உருவாகி இருப்பதை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் காரின் பக்கவாட்டு கிளாடிங், டோர் எட்ஜ் கார்டு உள்ளிட்டவைகளில் சில்வர் இன்சர்ட் மற்றும் சி பில்லர் டீக்கல் மீது ஆனிவர்சரி எடிஷன் எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர புதிய ஆனிவர்சரி எடிஷனில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குஷக் ஸ்பெஷல் எடிஷன் மாடல் குஷக் டாப் எண்ட் ஸ்டைல் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்பெஷல் எடிஷன் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 10 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது ஸ்கோடா குஷக் மாடல் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என இருவித என்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. விலையை பொருத்தவரை புதிய ஸ்கோடா குஷக் ஆனிவர்சி எடிஷன் ரூ. 15 லட்சத்து 59 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 19 லட்சத்து 09 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×