search icon
என் மலர்tooltip icon

    கார்

    டிசம்பர் விற்பனையில் அசத்திய டாடா மோட்டார்ஸ்!
    X

    டிசம்பர் விற்பனையில் அசத்திய டாடா மோட்டார்ஸ்!

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிசம்பர் மாத பயணிகள் வாகன விவரங்களை வெளியிட்டு உள்ளது.
    • உள்நாடு மற்றும் வெளிநாட்டு விற்பனையில் டாடா மோட்டார்ஸ் அசத்தல் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டு வாகன விற்பனையில் 10 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் 72 ஆயிர்து 997 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது 2021 டிசம்பர் மாதத்தில் விற்பனையான 66 ஆயிரத்து 307 யூனிட்களை விட அதிகம் ஆகும்.

    உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதத்தில் மட்டும் 40 ஆயிரத்து 043 யூனிட்கள் ஆகும். 2021 டிசம்பரில் இது 35 ஆயிரத்து 299 என இருந்தது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவு 13.4 சதவீதம் வளர்ச்சியை பெற்று இருக்கிறது. கடந்த மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 868 ஆகும். இது 2021 டிசம்பரில் விற்பனையான 2 ஆயிரத்து 355 யூனிட்களை விட 64.2 சதவீதம் அதிகம் ஆகும்.

    "2022 ஆண்டு டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனை அமோகமாக இருந்துள்ளது. சந்தை வளர்ச்சியை கடந்து, ஐந்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டி இருக்கிறோம். ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 26 ஆயிரத்து 798 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிடடி லிமிடெட் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.

    "ஒவ்வொரு மாநிலமும் அறிவிக்கும் புதுமை மிக்க திட்டங்கள் மற்றும் தொடர்ந்து அதிகரிக்கும் பிரபலத்தன்மை காரணமாக எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். அடுத்த காலாண்டிலும் பயணிகள் வாகன பிரிவு கணிசமான வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கிறோம். வினியோக பிரிவு சார்ந்த சிக்கல் தொடர்பாக சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை உற்று நோக்கி வருகிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    Next Story
    ×