search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    2022 டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 S இந்தியாவில் அறிமுகம்
    X

    2022 டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 S இந்தியாவில் அறிமுகம்

    • டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மல்டிஸ்டிராடா V4 S மாடலை அறிமுகம் செய்தது.
    • 2022 V4 S மாடல் கணிசமான அப்டேட்களை பெற்று புது அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் 2022 மல்டிஸ்டிராடா V4 S அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2022 டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 S மாடல் ஐஸ்பெர்க் வைட் என புதிய நிறத்தில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 26 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலின் டாப் எண்ட் S வெர்ஷனை விட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

    2022 டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 S மாடலில் பிரீலோட் செட்டப், ரிவைஸ்டு இன்போடெயின்மெண்ட் செட்டப், லோயர்டு சஸ்பென்ஷன் கிட் மற்றும் அலுமினியம் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் பவர்டிரெயினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் 2022 மல்டிஸ்டிராடா V4 S மாடலிலும் 1158சிசி, கிரான்டூரிஸ்மோ V4 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 167.6 ஹெச்பி பவர், 121 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் டுகாட்டி ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் இவோ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் வயர்-ஸ்போக் வீல்கள், 6.5 இன்ச் டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், நேவிகேஷன், கால்ஸ், மியூசிக் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 30 லிட்டர் பியூவல் டேன்க் உள்ளது.

    புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 S மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் எண்டியூரோ என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் கார்னெரிங் ஏபிஎஸ், வீலி கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன.

    Next Story
    ×