என் மலர்
பைக்
இந்தியாவில் அறிமுகமான 2024 பல்சர் N சீரிஸ் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் எல்.சி.டி. யூனிட் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்விட்டி உள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2024 பல்சர் N150 மற்றும் பல்சர் N160 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரண்டு புதிய மாடல்களும் இரு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. புதிய பல்சர் N150 பேஸ் வேரியன்ட் விலை ரூ. 1 லட்சத்து 18 ஆயிரம் என்றும் N160 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முந்தைய மாடல்களை போன்றே 2024 வெர்ஷனின் பேஸ் வேரியன்ட்களில் அனலாக் டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே பல்சர் N150 மாடலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பல்சர் N160 மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருப்பதால், இதன் விலை மட்டும் கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 2024 பல்சர் N150 மற்றும் பல்சர் N160 டாப் என்ட் மாடல்கள் விலை முறையே ரூ. 1 லட்சத்து 24 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் முற்றிலும் புதிய டிஜிட்டல் எல்.சி.டி. யூனிட் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்விட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் பல்சர் N150 மாடலின் டாப் என்ட் வெர்ஷனில் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. புதிய பஜாஜ் பல்சர் N150 மற்றும் N160 மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது.