என் மலர்
இது புதுசு
முழு எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் முன்பதிவு விவரம் - வெளியான சூப்பர் தகவல்!
- 700 கிமீ வரை செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஃபிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது.
- இந்த மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களே புதிய லேண்ட் ரோவர் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்படும் என்று தெரிகிறது.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடலின் முன்பதிவுகள் இந்த ஆண்டே துவங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, 2025 வாக்கில் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. முற்றிலும் புதிய எலெக்டிரிக் மாட்யுலர் ஆர்கிடெக்ச்சரில் புதிய ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக் கார் உருவாகி வருகிறது. இதே ஆர்கிடெக்ச்சரில் எதிர்கால லேண்ட் ரோவர் மாடல்களும் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஃபிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்வதாக ஜாகுவார் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த மாடலின் விலை ரூ. 1.2 கோடி வரை இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களே புதிய லேண்ட் ரோவர் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதுதவிர தற்போது ஐசி என்ஜின் மற்றும் ஹைப்ரிட் மாடல்களை உருவாக்க பயன்படுத்தப்படும் மாட்யுலர் ஆர்கிடெக்ச்சரில் புதிய கார் மாடல்கள் உருவாக்கப்படும் என்று லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. எலெக்ட்ரிக் எவோக் மற்றும் டிஸ்கவரி மாடல்களுக்கு முன் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ரேன்ஜ் ரோவர் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு துவங்கி எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடல் இந்தியாவுக்கு சிபியு (முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட வடிவில்) முறையில் இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், இதற்காக குறைந்த எண்ணிக்கைகளே விற்பனைக்கு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.