search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் - இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு!
    X

    பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் - இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

    • பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்டாண்டர்டு 3 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் சார்ந்த மாற்றங்களை பெறுகிறது.
    • புதிய 3 சீரிஸ் கிரான் லிமோசின் மேம்பட்ட வெர்ஷன் உள்புறம் M340i மற்றும் i4 மாடல்களில் உள்ளதை போன்ற வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காரில் மேம்பட்ட நீண்ட வீல்பேஸ், காஸ்மெடிக் மாற்றங்கள், கூடுதல் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. M340i ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ளதை போன்ற அப்டேட்கள் புது காரிலும் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி புது காரில் ரிடிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், ட்வீக் செய்யப்பட்ட கிரில் வழங்கப்பட்டுள்ளது.

    பம்ப்பர்கள் மாற்றப்பட்டு, புதிய அலாய் வீல்கள், பின்புறம் டெயில் லேம்ப்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. உள்புறம் i4 செடான் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. ரிடிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டு, வளைந்த டிஸ்ப்ளே, செண்ட்ரல் இன்ஃபோடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் ஏசி வெண்ட்களும் ரிடிசைன் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புது காரில் 330i மற்றும் 320d மாடலில் உள்ளதை போன்ற 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 330i மாடலின் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 254 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் 320d டீசல் எனஜின் 187 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் விலை தற்போதைய வெர்ஷனை விட சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும்.

    Next Story
    ×