search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ 520d M ஸ்போர்ட் வேரியண்ட்
    X

    இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ 520d M ஸ்போர்ட் வேரியண்ட்

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கும் புதிய 5 சீரிஸ் மாடல் 2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டுள்ளது.
    • புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டதோடு பிஎம்டபிள்யூ நிறுவனம் மூன்று வேரியண்ட்களை நிறுத்திவிட்டது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது 5 சீரிஸ் மாடல்களில் முற்றிலும் புதிய வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. பிஎம்டபிள்யூ 520d M ஸ்போர்ட் ஆடம்பர செடான் மாடலின் புதிய வேரியண்ட் விலை ரூ. 68 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதோடு பிஎம்டபிள்யூ நிறுவனம் மூன்று வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்தி விட்டது.

    இவற்றில் 50 ஜாரெ M எடிஷன், 530d M ஸ்போர்ட் மற்றும் 520d M லக்சரி லைன் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடல் தற்போது 530i M ஸ்போர்ட் மற்றும் 520d M ஸ்போர்ட் என இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. இவற்றில் 520d M ஸ்போர்ட் விலை 530d M ஸ்போர்ட் மாடலை விட ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் குறைவு ஆகும். இதில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 188 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    முந்தைய 530i M ஸ்போர்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. இந்த என்ஜின் 248 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த வேரியண்டின் விலை தற்போது மாற்றப்பட்டு, ரூ. 90 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 2023 துவங்கியதில் இருந்து பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் ஐந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றில் புதிய 7 சீரிஸ், i7 EV, X7, 3 சீரிஸ் கிரான் லிமோசின் மற்றும் sX1 போன்ற மாடல்கள் அடங்கும்.

    Next Story
    ×