search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    521 கிமீ ரேன்ஜ் வழங்கும் பி.ஒய்.டி. அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட் - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?

    • காரின் அம்சங்கள் செடான் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த காரில் லெவல் 2 ADAS, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    பி.ஒய்.டி. நிறுவனம் தனது 2024 அட்டோ 3 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மேம்பட்ட மாடலின் வெளிப்புறம் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய நிற ஆப்ஷன்கள் மற்றும் மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சில அம்சங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சீல் செடான் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.

    புதிய கார் காஸ்மோஸ் பிளாக் பெயரில் புது நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் புதிய பேட்டன் டிசைன் கொண்ட 18-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதன் பின்புறம் பில்டு யுவர் டிரீம்ஸ் லோகோவுக்கு மாற்றாக பி.ஒய்.டி. எழுத்துக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. உள்புறத்தில் 15.6 இன்ச் அளவில் சுழலக்கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.


    பி.ஒய்.டி. அட்டோ 3 மாடலில் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பவர்டு டிரைவர் சீட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், வயர்லெஸ் சார்ஜர், லெவல் 2 ADAS, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    புதிய அட்டோ 3 மாடலில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி பேக் 80 கிலோவாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு காரை 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

    சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பி.ஒய்.டி. அட்டோ 3 மாடலின் விலை ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×