என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இது புதுசு
700 கிமீ ரேன்ஜ் வழங்கும் புது செடான் - ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் பிஒய்டி!
- பிஒய்டி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகின்றன.
- சமீபத்தில் பிஒய்டி அட்டோ 3 மற்றும் e6 மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
இந்திய சந்தையில் சீன எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளாரான பிஒய்டி எலெக்ட்ரிக் எம்பிவி மற்றும் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களை விற்பனை செய்து வருகிறது. e6 எம்பிவி மற்றும் அட்டோ 3 மாடல்கள் வரிசையில் பிஒய்டி நிறுவனம் மற்றொரு எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பிஒய்டி எலெக்ட்ரிக் கார் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வு ஜனவரி 13 ஆம் தேதி துவங்கி ஜனவரி 18 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய பிஒய்டி எலெக்ட்ரிக் செடான் மாடல் காட்சிப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு சர்வதேச சந்தைகளில் பிஒய்டி சீல் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் ஓஷன் எக்ஸ் கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் ஸ்கேட்போர்டு பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.
பிஒய்டி சீல் மாடல் 4.80 மீட்டர் நீளம், 1.87 மீட்டர் அகலம், 1.46 மீட்டர் உயரம் மற்றும் 2.92 மீட்டர் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடல் வெளிப்புறத்தில் முன்புற டிப்பிங் பொனெட், கூர்மையான ஹெட்லேம்ப் கிளஸ்டர், கூப் போன்ற ரூஃப்லைன், பக்கவாட்டுகளில் கேரக்டர் லைன், ஸ்போர்ட் அலாய் வீல்கள், ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், ஷார்ட் ஒவர்ஹேங், பிரமாண்ட பம்ப்பர், அகலமான ஏர் இண்டேக், பூமராங் வடிவ எல்இடி டிஆர்எல்கள், ஃபுல் விட்த் எல்இடி லைட் பார் வழங்கப்படுகிறது.
புதிய பிஒய்டி சீல் மாடலில் 61.4 கிலோவாட் ஹவர் மற்றும் 82.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக்குகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் சிறிய பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 550 கிலோமீட்டர்களும், பெரிய பேட்டரி 700 கிலோமீட்டர்களும் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. இவை சிங்கில் மற்றும் டூயல் மோட்டார் வடிவில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்