என் மலர்
இது புதுசு
சிட்ரோயன் C3 ஷைன் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C3 ஷைன் வேரியண்ட் இந்த சீரிசில் டாப் எண்ட் மாடலாக உள்ளது.
- புதிய C3 ஷைன் நான்கு வெர்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் C3 ஹேச்பேக் மாடலின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. C3 சீரிசில் டாப் எண்ட் மாடலாக அறிமுகமாகி இருக்கும் சிட்ரோயன் C3 ஷைன், ஷைன் வைப் பேக், ஷைன் டூயல் டோன் மற்றும் ஷைன் டூயல் டோன் மற்றும் வைப் பேக் என மொத்தத்தில் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய சிட்ரோயன் C3 ஷைன் விலை ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. ஃபீல் வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது புதிய சிட்ரோயன் C3 ஷைன் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVM-கள், ரியர் பார்கிங் கேமரா, டே/நைட் IRVM, 15 இன்ச் டைமண்ட் கட் அலாய்கள், ஃபாக் லைட்கள், ரியர் வைப்பர், வாஷர், ரியர் ஸ்கிட் பிளேட்கள், ரியர் டிஃபாகர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 35 கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்ட மை சிட்ரோயன் கனெக்ட் ஆப் வசதியும் உள்ளது. புதிய சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 80 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
சிட்ரோயன் C3 ஷைன் ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம்
சிட்ரோயன் C3 ஷைன் வைப் பேக் ரூ. 7 லட்சத்து 72 ஆயிரம்
சிட்ரோயன் C3 ஷைன் டூயல் டோன் ரூ. 7 லட்சத்து 75 ஆயிரம்
சிட்ரோயன் C3 ஷைன் டூயல் டோன் வைப் பேக் ரூ. 7 லட்சத்து 87 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.