search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    631 கிமீ ரேன்ஜ் வழங்கும் ஹூண்டாய் EV கார் - முன்பதிவு துவக்கம்!
    X

    631 கிமீ ரேன்ஜ் வழங்கும் ஹூண்டாய் EV கார் - முன்பதிவு துவக்கம்!

    • ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 631 கிமீ வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவுக்கான ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. புதிய ஐயோனிக் 5 மாடலின் வெளியீடு 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் நடைபெற இருக்கிறது. புதிய ஐயோனிக் 5 மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அளவீடுகளை பொருத்தவரை புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் 4635mm நீளம், 1890mm அகலம், 1625mm உயரமாக இருக்கிறது. இந்த காரின் வீல்பேஸ் 3000mm ஆகும். இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் - மேட் கிராவிட்டி கோல்டு, ஆப்டிக் வைட் மற்றும் மிட்நைட் பிளாக் பியல் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    இந்த காரில் 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 214 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 631 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என ARAI சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் 350 கிலோவாட் DC சார்ஜர் மூலம் இந்த காரை 10-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும்.

    பாதுகாப்பிற்கு ஐயோனிக் 5 மாடலில் ஆறு ஏர்பேக், ABS மற்றும் EBD, VESS, EPB, MCB, நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. டிசைனை பொருத்தவரை புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடலில் பாராமெட்ரிக் பிக்சல் எல்இடி ஹெட்லேம்ப், முன்புறம், பின்புறம் பம்ப்பர்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்கிட் பிலேட்கள், ஆக்டிவ் ஏர் ஃபிளாப்கள், 20 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ஃபிலஷ் ஃபிட் டோர் ஹேண்டில்கள், எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ரேக்டு ரியர் விண்ட்ஷீல்டு வழங்கப்பட்டு இருக்கிறது.

    காரின் உள்புறம் டார்க் பெபில் கிரே இண்டீரியர் தீம், ஸ்லைடிங் செண்டர் கன்சோல், ஸ்லைடிங் குளோவ் பாக்ஸ், லெவல் 2 ADAS, இரு 12.3 இன்ச் ஸ்கிரீன்கள், V2L (வெஹிகில் டு லோட்) தொழில்நுட்பம், போஸ் நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர் மியுசிக் சிஸ்டம், புளூ லின்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், பவர்டு டெயில்கேட், ஹீடெட் மற்றும் வெண்டிலேடெட் முன்புற இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு முன்புற இருக்கை மற்றும் லம்பர் சப்போர்ட், மெமரி ஃபன்ஷன் உள்ளது.

    Next Story
    ×