search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    620 கி.மீ. ரேஞ்ச் வழங்கும் ஹூண்டாய் கார் அறிமுகம்
    X

    620 கி.மீ. ரேஞ்ச் வழங்கும் ஹூண்டாய் கார் அறிமுகம்

    • 620 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும்.
    • பின்புறம் எல்இடி காம்பினேஷன் லைட்கள் உள்ளது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது ஐயோனிக் சீரிஸ் மாடல்களில் புதிய காரை இணைத்துக் கொண்டுள்ளது. இந்த முறை ஹூண்டாய் ஐயோனிக் 9 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் மூன்றடுக்கு இருக்கைகளை கொண்டுள்ளது. இது முழு சார்ஜ் செய்தால் 620 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    இந்த எலெக்ட்ரிக் காரில் ஏழு பேர் வரை பயணம் செய்ய முடியும். இந்த கார் இதுவரை வெளியான ஹூண்டாய் மாடல்களை விட நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் பாராமெட்ரிக் பிக்சல் லேம்ப்கள் மற்றும் சிறிய ப்ரோஜெக்ஷன் ஹெட்லைட்கள் வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் எல்இடி காம்பினேஷன் லைட்கள் வழங்கப்படுகின்றன.


    வீல்களை பொருத்தவரை இந்த கார் 19 இன்ச், 20 இன்ச் மற்றும் 21 இன்ச் அளவுகளில் ஆப்ஷன் வழங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடலில் 21 இன்ச் கேலிகிராஃபி டிசைன் வழங்கப்படுகிறது. ஹூண்டாய் ஐயோனிக் 9 மாடல் மொத்தம் 16 நிறங்கள், ஆறு வித இன்டீரியர் டூ-டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்த கார் 110.3 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரிகளுடன் வருகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 620 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என சான்று பெற்றுள்ளது. இதன் ரியர் வீல் டிரைவ் மாடலில் 160 கிலோவாட் மோட்டார் உள்ளது.

    புதிய ஹூண்டாய் ஐயோனிக் 9 மாடல் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் இதர சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.

    Next Story
    ×