search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    முற்றிலும் புதிய ஐயோனிக் 6 மாடலை இந்தியாவில் காட்சிப்படுத்தும் ஹூண்டாய்!
    X

    முற்றிலும் புதிய ஐயோனிக் 6 மாடலை இந்தியாவில் காட்சிப்படுத்தும் ஹூண்டாய்!

    • ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 6 மாடல் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 614 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி துவங்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வுக்காக தயாராகி வருகிறது. புது டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்வு ஆட்டோமொபைல் துறையில் முக்கியமான ஒன்று ஆகும். இதில் ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய, கான்செப்ட் மற்றும் தற்போதைய மாடல்களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் மாடலாக இருக்கும்.

    இதுதவிர ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 6 மாடலும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஐயோனிக் 6 ஹூண்டாய் சமீபத்தில் அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் செடான் மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனமாக ஐயோனிக் 6 அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற இரு ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்கள்- கோனா மற்றும் ஐயோனிக் 5 ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன.

    ஐயோனிக் 6 மாடல் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் தான் கியா EV6 மாடலும் உருவாக்கப்பட்டது. ஸ்டைலிஷ் ஃபுல் எலெக்ட்ரிக் செடான் மாடலான ஐயோனிக் 6 ஏரோடைனமிக் சில்ஹவுட் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த காரின் பின்புறம் பிக்சல் ஸ்டைல் எல்இடி டெயில் லைட்கள் உள்ளன. இத்துடன் டக்டெயில் ரியர் ஸ்பாயிலர், வளைந்த ஷோல்டர் லைன் உள்ளது.

    எலெக்ட்ரிக் காரின் உள்புறத்தில் ஃபிலாட் செண்டர் கன்சோல், டூயல் 12 இன்ச் டச் ஸ்கிரீன்கள், 2-ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளது. அளவீடுகளை பொருத்தவரை ஐயோனிக் 6 மாடல் 4855mm நீளமாகவும், 1880mm அகலமாகவும், 1495mm உயரம் மற்றும் 2950mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. அளவில் இந்த கார் டெஸ்லா மாடல் 3, போல்ஸ்டார் 2 மற்றும் பிஎம்டபிள்யூ i4 மாடல்களுக்கு மிக நெருக்கமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடல் 53 கிலோவாட் ஹவர் மற்றும் 77 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் சிங்கில் மோட்டார் RWD ஸ்டாண்டர்டு அம்சமாகவும், டாப் வேரியண்ட்களில் டூயல் மோட்டார், AWD ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஐயோனிக் 6 காரில் டூயல் மோட்டார் செட்டப் 320 ஹெச்பி பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    தற்போதைய ஐயோனிக் 5 மாடலில் உள்ள RWD செட்டப் 228 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய ஐயோனிக் 6 மாடலின் RWD 53 கிலோவாட் ஹவர் வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் 429 கிலோமீட்டர்களும், 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட RWD வெர்ஷன் 614 கிலோமீட்டர்களும், AWD வெர்ஷன் 583 கிலோமீட்டர்கள் செல்லும் என WLTP சான்று பெற்றுள்ளன.

    Next Story
    ×