என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இது புதுசு
கவாசகியின் குறைந்த விலை குரூயிசர் பைக்.. வெளியீடு எப்போ தெரியுமா?
- கவாசகி நிறுவனம் W175 ஸ்டிரீட் மாடலை அறிமுகம் செய்தது.
- எலிமினேட்டர் 450 மாடலில் 451சிசி, பேரலல் டுவின் என்ஜின் உள்ளது.
கவாசகி நிறுவனம் தனது எலிமினேட்டர் 450 மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில், கவாசகி எலிமினேட்டர் 450 மாடல் இந்தியா பைக் வார நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், இதற்கு மாற்றாக அந்நிறுவனம் W175 ஸ்டிரீட் மாடலை அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், தான், கவாசகி நிறுவனத்தின் எலிமினேட்டர் 450 க்ரூசர் மாடல் மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களில் பலர் எலிமினேட்டர் 450 குறித்த தகவல்களை கவாசகியிடம் தொடர்ந்து கேட்டு வருவதாக தெரிகிறது.
தற்போது கவாசகி நிறுவனம் க்ரூயிசர் பிரிவில் வல்கன் எஸ் 650சிசி மாடலை விற்பனை செய்து வருகிறது. இதன் எடை 235 கிலோ ஆகும். இதன் காரணமாக இந்திய சந்தையில் 176 கிலோ எடை கொண்ட எலிமினேட்டர் மாடல் வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளை விட குறைந்த விலையில் கிடைக்கும் ஆப்ஷனாக அமையும்.
புதிய எலிமினேட்டர் 450 மாடலில் 451சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 49 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் டிரெலிஸ் ஃபிரேம் உள்ளது. மேலும் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் கவாசகி எலிமினேட்டர் 450 மாடல் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650-க்கு போட்டியாக அமையும். புதிய எலிமினேட்டர் 450 மாடல் இந்தியாவுக்கு முழுமையாக உருவாக்கப்பட்ட நிலையில், இறக்குமதி செய்யப்படுமா அல்லது பாகங்கள் கொண்டுவரப்பட்டு இந்தியாவில் அசெம்பில் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.