என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இது புதுசு
லம்போர்கினியின் புது சூப்பர்கார் இந்தியாவில் அறிமுகம்
- லம்போர்கினி நிறுவனம் தனது ஹூரகேன் ஸ்டெராடோ சூப்பர்கார் மாடலை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.
- புதிய ஹூரகேன் ஸ்டெராடோ மாடல் மணிக்கு அதிகபட்சமாக 260 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
லம்போர்கினி நிறுவனம் ஹூரகேன் ஸ்டெராடோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹூரகேன் ஸ்டெராடோ மாடலின் விலை ரூ. 4 கோடியே 61 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. லம்போர்கினி நிறுவனம் புதிய ஹூரகேன் ஸ்டெராடோ மாடலை மொத்தத்தில் 1,499 யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்ய இருக்கிறது. உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் துவங்குகிறது.
சர்வேதச அளவில் லம்போர்கினி நிறுவனத்தின் மிகமுக்கிய சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இதன் காரணமாக லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் தனது சூப்பர்கார் மாடல்களின் முன்பதிவை இருமடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் அடுத்த 15 முதல் 18 மாதங்களுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே நிறைவு பெற்று விட்டதாக அறிவித்துள்ளது.
புதிய ஸ்டெரடோ மாடல் ஆஃப்-ரோடு சார்ந்த சஸ்பென்ஷன் செட்டப் கொண்டிருக்கிறது. இது ஸ்டாண்டர்டு மாடலை விட 44mm உயரமாக இறுக்கிறது. சஸ்பென்ஷன் டிராவல் முன்புறம் 33mm ஆகவும், பின்புறம் 34mm ஆகவும் உள்ளது. இந்த காரில் 19 இன்ச் அலாய் வீல்கள், பிரிட்ஜ்ஸ்டோன் டியூலெர் AT002 ஆல்-டெரைன் டயர்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு 380mm கார்பன்-செராமிக் டிஸ்க், 6 பிஸ்டன்கள் கொண்ட கேலிப்பர்கள், பின்புறத்திற்கு 356mm டிஸ்க் மற்றும் 4 பிஸ்டன் கேலிப்பர்கள் உள்ளன.
லம்போர்கினி ஹூரகேன் ஸ்டெராடோ மாடலில் 5.2 லிட்டர் NA V10 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள என்ஜின் 602 ஹெச்பி பவர், 560 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 260 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்