search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்கள் அறிமுகம்
    X

    மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்கள் அறிமுகம்

    • மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
    • பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல்களை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்தியாவை சேர்ந்த எஸ்யுவி உற்பத்தியாளரான மஹிந்திரா தனது BE Rall-E எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை ஃபார்முலா E ஐதராபாத் E-ப்ரிக்ஸ் நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் XUV.e9 மற்றும் BE.05 EV கான்செப்ட்களையும் இந்திய பயனர்களுக்கு அறிமுகம் செய்தது. இரு கார்களின் உற்பத்தியும் இந்த தசாப்தத்திலேயே துவங்கும் என தெரிகிறது.

    மஹிந்திரா BE Rall-E எலெக்ட்ரிக் கான்செப்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பார்ன் எலெக்ட்ரிக் பிரிவின் புதுவரவு மாடல் ஆகும். இந்த கார் பார்ன் எலெக்ட்ரிக் சீரிசை தழுவிய டிசைன் கொண்டிருக்கிறது. எனினும், இது ஆஃப்-ரோட் மாடலாக உருவாகி வருகிறது. இந்த மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன் உள்ளது.

    இத்துடன் சில்வர் பேஷ் பிளேட், சற்றே தடிமனான வீல்ஆர்ச்கள், ஏரோ வீல்கள், மேக்சிஸ் ஆல்-டெரைன் டையர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் ரூஃப் ரேக் ஸ்பேர் வீல் கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் மெல்லிய டெயில் லைட்கள், தடிமனான பம்ப்பர் மற்றும் பேஷ் பிளேட் உள்ளது. மற்ற பார்ன் எலெக்ட்ரிக் மாடல்களை போன்றே BE Rall-E கான்செப்ட் மாடலும் IN-GLO ஸ்கேட்போர்டு EV பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பேட்டரி விவரங்கள் எதுவும் தற்போது அறிவிக்கப்படவில்லை.

    இத்துடன் மஹிந்திரா நிறுவனம் XUV.e9 எலெக்ட்ரிக் எஸ்யுவியை முதல்முறையாக இந்தியாவில் காட்சிப்படுத்தியது. கடந்த ஆண்டு லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது இந்தியாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மஹிந்திராவின் புதிய XUV.e சீரிசில் ஃபிளாக்ஷிப் மாடலாக XUV.e9 இருக்கும்.

    இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி-இல் எல்இடி டிஆர்எல்கள் காரின் முன்புறம் முழுக்க படர்ந்து இருக்கின்றன. இதன் ஹெட்லேம்ப்கள் செங்குத்தாக முன்புற பம்ப்பர் மீது பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் முன்புறம், பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் பிளாஸ்டிக் கிளாடிங் காணப்படுகின்றன. இத்துடன் காரை சுற்றி காப்பர் அக்செண்ட்களும் உள்ளன.

    இரு கார்களை தொடர்ந்து BE.05 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யையும் மஹிந்திரா அறிமுகம் செய்தது. இந்த கார் அளவில் 4370mm நீளம், 1900mm அகலம், 1635mm உயரம் மற்றும் 2775mm வீல்பேஸ் கொண்டுள்ளது. 2025 ஆண்டு இறுதியில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த காரும் IN-GLO பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் 60 அல்லது 80 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படலாம்.

    Next Story
    ×