search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    சர்வதேச சந்தையில் அறிமுகமான புது தலைமுறை ஹோண்டா WR-V
    X

    சர்வதேச சந்தையில் அறிமுகமான புது தலைமுறை ஹோண்டா WR-V

    • ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய WR-V மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புது தலைமுறை ஹோண்டா WR-V ஏராளமான ADAS அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி முற்றிலும் புதிய WR-V மாடலை இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தோனேசியாவில் இருந்தபடி புதிய ஹோண்டா WR-V சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹோண்டா WR-V எஸ்யுவி அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ADAS உள்பட ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஸ்டைலிங் மற்றும் டிசைனை பொருத்தவரை புதிய WR-V மாடல் தோற்றத்தில் ஸ்போர்ட் கார் போன்று காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் க்ரோம்-ஸ்டட் செய்யப்பட்ட முன்புற கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்-கள், முன்புறம் பம்ப்பர் மாற்றப்பட்டு ரி-டிசைன் செய்யப்பட்ட ஃபாக் லேம்ப் ஹவுசிங், பிளாக் அவுட்லைன் இடம்பெற்று இருக்கிறது. புதிய WR-V மாடல் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், பின்புறம் ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லேம்ப்கள், ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் கொண்டுள்ளது.

    ஹோண்டா WR-V மாடலின் கேபின் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் அமேஸ் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் புதிய WR-V உள்புறம் ஆல்-பிளாக் தீம், ஸ்டீரிங் வீல், டேஷ்போர்டு, டோர் பேட் உள்ளிட்டவைகளில் ரெட் ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் 7 இன்ச் தொடு திரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் ஹோண்டா WR-V மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 119 ஹெச்பி பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் சிவிடி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா WR-V இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்திய சந்தைக்காக முற்றிலும் புது எஸ்யுவி மாடலை உருவாக்கும் பணிகளில் ஹோண்டா ஈடுபட்டு வருகிறது.

    Next Story
    ×