search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ரூ. 1.99 கோடியில் போர்ஷே 911 பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம்
    X

    ரூ. 1.99 கோடியில் போர்ஷே 911 பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம்

    • போர்ஷே 911 மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    • இந்த மாடலில் 3.0 லிட்டர் டுவின் டர்போ பாக்சர் எஞ்சின் உள்ளது.

    போர்ஷே நிறுவனத்தின் புதிய 911 பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த சூப்பர் கார் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இந்திய சந்தையில் போர்ஷே 911 பேஸ்லிப்ட் மாடல் கரெரா மற்றும் கரெரா 4 GTS என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    2024 போர்ஷே 911 கரெரா மாடலின் விலை ரூ. 1 கோடியே 99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூப்பர் கார் மாடலில் 3.0 லிட்டர் டுவின் டர்போ பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 394 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு PDK ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.


    இந்த வேரியண்டில் போர்ஷே ஆக்டிவ் சஸ்பென்ஷன் மேனேஜ்மென்ட், 4 விதங்களில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்போர்ட் சீட்கள், ஹீட்டிங் வசதி, 6 பிஸ்டன்கள் கொண்ட அலுமினியம் மோனோ-பிலாக் பிரேக் கேலிப்பர்கள், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ரிவர்ஸ் கேமரா, 2-ஜோன் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    2024 போர்ஷே 911 கரெரா 4 GTS வேரியண்டின் விலை ரூ. 2 கோடியே 75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் புதிய T-ஹைப்ரிட் பவர்டிரெயிடன் அதாவது 3.6 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் டர்போசார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 541 ஹெச்.பி. பவர், 610 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு PDK ஆட்டோ டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்த காரில் ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இதில் அனலாக், டிஜிட்டல் ஸ்டாப் வாட்ச், ஸ்போர்ட் க்ரோனோ கிளாக், பிளாக் ஷிப்ட் பேடில்கள், ஸ்போர்ட் பிளஸ் மோட், PSM ஸ்போர்ட் மோட், போர்ஷே டிராக் பிரெசிஷன் ஆப், டயர் டெம்ப்பரேச்சர் டிஸ்ப்ளே, ஸ்போர்ட் ரெஸ்பான்ஸ் பட்டன் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    Next Story
    ×