search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ரீ-என்ட்ரி-க்கு ரெடியான டாடா சியரா - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    ரீ-என்ட்ரி-க்கு ரெடியான டாடா சியரா - வெளியீடு எப்போ தெரியுமா?

    • இருவித ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படும்.
    • ஐ.சி. எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்படும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபல கார் மாடலாக சியரா விளங்குகிறது. இந்த நிலையில், சியரா பிராண்டிங்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் முற்றிலும் புதிய சியரா மாடல் எலெக்ட்ரிக் மற்றும் ஐ.சி. எஞ்சின் என இருவித ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படும்.

    இதில் முதற்கட்டமாக சியரா எலெக்ட்ரிக் மாடலும் அதன்பிறகு ஐ.சி. எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்படும். இரு மாடல்களும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கர்வ் எலெக்ட்ரிக் மாடலும் அதன்பிறகு ஐசி எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய சியரா மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Acti.EV ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது டாடா நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்ம் ஆகும். இதே பிளாட்பார்மில் முன்னதாக டாடா பன்ச் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த வரிசையில் உருவாகி இருக்கும் சியரா மாடலில் இரட்டை மோட்டார் செட்டப் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதே போன்ற செட்டப் ஹேரியர் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புதிய சியரா மாடலில் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×