என் மலர்
இது புதுசு
டிவிஎஸ் அபாச்சி RR 310 மியாமி புளூ எடிஷன் அறிமுகம்
- டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் அபாச்சி RR 310.
- கொலம்பியாவில் இந்த மாடலின் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனம் அபாச்சி RR 310 ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிளின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் அபாச்சி RR 310 மியாமி புளூ என அழைக்கப்படுகிறது. இந்த வேரியண்ட் முதற்கட்டமாக கொலம்பியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அபாச்சி RR 310 மியாமி புளூ நிற வேரியண்டில் புளூ, பிளாக் மற்றும் ரெட் என மூன்று நிறங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிறத்தில் அபாச்சி RR 310 மாடல் அதிக ஸ்போர்ட் மற்றும் கவர்ச்சிகர தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலின் வீல்கள், ஃபிரேம், முகப்பு மற்றும் டெயில் பகுதியில் ரெட் அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளது.
புதிய அபாச்சி RR 310 மாடலில் 312சிசி, நான்கு வால்வுகள் கொண்ட சிலின்டர் சிங்கில் சிலின்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் அர்பன், ரெயின், ஸ்போர்ட் மற்றும் டிராக் என நான்கு ரைடு மோட்களை கொண்டிருக்கிறது.
இவைதவிர புதிய அபாச்சி மாடலில் ஸ்மார்ட் எக்சோனெக்ட் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மல்டி ஃபன்ஷன் ஸ்விட்ச்கியர், மிஷலின் ரோடு 5 ரக டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Photo Courtesy: rpmotos