என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இது புதுசு
வால்வோ சிறிய எலெக்ட்ரிக் கார் - வெளியீட்டு விவரம்
- வால்வோ நிறுவனத்தின் புதிய எண்ட்ரி-லெவல் எஸ்யுவி பல்வேறு பேட்டரி மற்றும் ரேன்ஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
- 2025 வாக்கில் உலகம் முழுக்க ஐந்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய வால்வோ திட்டம்.
உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன துறையில் கணிசமான பங்குகளை பெறும் நோக்கில் வால்வோ கார்ஸ் நிறுவனம் அளவில் சிறிய எலெக்ட்ரிக் எஸ்யுவி-யை அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியா, ASEAN மற்றும் இதர ஆசிய பசிபிக் நாடுகளில் கவனம் செலுத்தும் நோக்கில், இந்த திட்டத்தை வால்வோ கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது.
புதிய சிறிய எலெக்ட்ரிக் வாகனம் 2023 கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் விலை இந்தியா மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கு ஏற்ப எண்ட்ரி லெவல் பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என வால்வோ கார்ஸ் தலைமை செயல் அதிகாரி ஜிம் ரோவன் தெரிவித்து இருக்கிறார்.
"முழு பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த பல்வேறு நாடுகள் முன்வருவதை தெளிவாக பார்க்க முடிகிறது. சிறிய எஸ்யுவி-யை கொண்டு வருவதன் மூலம், நாங்கள் இந்த நாடுகளில் சிறந்து செயல்பட முடியும். குறைந்த கட்டணத்தில் ஏராளமான பேட்டரி அளவுகளில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி அறிமுகமாகும்."
"வாடிக்கையாளர்கள் ஏராளமான ரேன்ஜ் ஆப்ஷன்கள் மற்றும் விலை பட்டியலில் இருந்து வாகனத்தை தேர்வு செய்ய முடியும். புது சிறிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் நகரம் மற்றும் நெடுஞ்சாலை என இருவித பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்," என ரோவன் தெரிவித்தார்.
வால்வோ நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ உருவாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக சிறிய எலெக்ட்ரிக் எஸ்யுவி உருவாகி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2030 வாக்கில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாறும் திட்டத்தை முதன்முதலில் அறிவித்த நிறுவனங்களில் வால்வோ கார்ஸ் ஒன்று ஆகும்.