என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • முப்பெரும் விழா கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்
    • சிறப்பு பாடல் வீடியோ வெளியீடு

    நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியின் பிறந்தநாள், சினிமாவில் 50வது ஆண்டு, 25 ஆண்டுகளுக்கு பின்னர் படையப்பா ரீரிலீஸ் என முப்பெரும் விழாவாக, மகிழ்ச்சியாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    மேலும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், முதலமைச்சர், சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ரஜினியின் பிறந்தநாளையொட்டி சிறப்பு பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    "உன் போல் யாருமில்லையே.. ஈரேழு உலகம் தேடியுமே.. மாறாத வைரம் உன் அகமே.. என் அரும் நண்பனே.. நண்பனே... நண்பனே... ஊர் போற்றும் இன்பனே... இன்பனே... இன்பனே... நீ தனி நான் தனி என்றில்லை... என்றுமே நாம் அது நிரந்தரமே.. நாம் அது நிரந்தரமே" எனும் வரிகள் அதில் இடம்பெற்றுள்ளன. 


    • இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார்.
    • விரைவில் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் படம் 'மெஜந்தா'. பரத் மோகன் இயக்கும் இப்படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு தயாரித்து வழங்குகின்றனர்.

    'மெஜந்தா' படத்தில் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பல்லு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி சென்னையிலும், கோத்தகிரியிலும் படமாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 'மெஜந்தா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் சாந்தனு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எங்கள் அடுத்த படமான "மெஜந்தா"வின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்த நிறத்திற்குப் பின்னால் அவள் ஒருபோதும் எதிர்கொள்ள விரும்பாத ஒரு உண்மை இருக்கிறது. விரைவில் டீசர் வெளியாகும் என கூறியுள்ளார்.


     

    • ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்‌ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
    • 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.

    பாலிவுட்டில் ரன்வீர் சிங்கின் புதிய ஸ்பை திரில்லர் படமான 'துரந்தர்' இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

    ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' புகழ் ஆதித்ய தார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தக் கதை பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.

    வெளியான ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் இந்தப் படம் ரூ. 200 கோடி நிகர வசூலைத் தாண்டியது. வளைகுடா நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டுச் சந்தைகளில் ரூ. 44.5 கோடியை வசூலித்தது.

    இந்த படம் பாகிஸ்தானுக்கு எதிரான செய்தியைக் கொண்டிருப்பதாகக் கூறி ஆறு வளைகுடா நாடுகள் படத்தைத் தடை செய்துள்ளன.

    பாலிவுட் படங்களுக்கு வளைகுடா பகுதி ஒரு முக்கியமான சந்தையாகும். இந்த சூழலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் படத்தின் கருப்பொருளை எதிர்த்து அதன் வெளியீட்டிற்கு அனுமதி மறுத்தனர்.

    முன்னதாக 'ஃபைட்டர்', 'டைகர் 3', 'ஆர்டிகிள் 370' மற்றும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற படங்களும் கடந்த காலங்களில் வளைகுடா நாடுகளில் இதேபோன்ற தடைகளைச் சந்தித்துள்ளன. 

    • இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
    • ‘சிறை’ திரைப்படம் வருகிற 25-ந்தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

    7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

    நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் வருகிற 25-ந்தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    டிரெய்லரின் படி காவல் அதிகாரியான விக்ரம் பிரபு சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றவாளியை அழைத்து செல்கிறார். அப்போது அந்த குற்றவாளி துப்பாக்கியுடன் தப்பிச்செல்கிறார். இதன்பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.

    நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள 'சிறை' படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளங்களில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 



    • இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.
    • கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.

    தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம்.

    தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, 'வரும் வெற்றி' என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.

    SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார்.

    அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார்.

    கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.

    பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளது.  

    • இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
    • ‘கொம்புசீவி’ கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.

    இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.

    இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது. அதனை தொடர்ந்து 'கொம்புசீவி' கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், 'கொம்புசீவி' படம் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக வருகிற 19-ந்தேதி வெளியாகும் என டிரெய்லரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. டிரெய்லரில் கிராமத்திற்காக போராடும் சரத்குமார், சண்முக பாண்டியனை சுற்றி வரும் கதையில் ஆக்ஷன், காதல், நகைச்சுவை கலந்து உருவாகி உள்ளது. 



    • இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
    • அரசியல் கதைகளத்துடன் கூடிய இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்துள்ள படம் 'கராத்தே பாபு'. ரவி மோகனின் 34-வது படமான இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ளது.

    இப்படத்தில் தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடித்திக்கிறார். இப்படத்தின் மூலம் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.

    மேலும் இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், ந சக்தி வாசுதேவன், காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். அரசியல் கதைகளத்துடன் கூடிய இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், 'கராத்தே பாபு' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக சிறப்பு வீடியோ வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. 



    • சவுதி அரேபியாவில் செங்கடல் திரைப்பட விழா நடைபெற்றது.
    • இதில் நடிகை ஆலியா பட்டிற்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.

    சவுதி அரேபியா:

    சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் வரும் 13-ம் தேதி வரை செங்கடல் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. இந்த செங்கடல் திரைப்பட விழாவில் சிறப்பான நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில், பாலிவுட் நடிகையான ஆலியா பட்டின் சிறந்த பங்களிப்பிற்காக 'கோல்டன் குளோப்' விருது வழங்கப்பட்டுள்ளது

    அப்போது, தனது தொடக்க காலத்தில் மிகுந்த ஆர்வமாக நடித்ததாக ஆலியா பட் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஓமர் ஷெரிப் விருதை துனிசிய நடிகை ஹெண்ட் சப்ரி வென்றார்.

    இதுதொடர்பாக கோல்டன் குளோப் தனது எக்ஸ் வலைதளத்தில், கோல்டன் குளோப் ஓரிஸான் விருதினை ஆலியா பட்டிற்கு கிடைத்ததில் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு நடந்த செங்கடல் திரைப்பட விழாவில் நடிகர் அமிர் கானுக்கு விருது வழங்கப்பட்டது.

    • ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களின் இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.
    • பாடல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

    சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், சசிகுமார் படங்களிலையே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மை லார்ட்'. இப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார். 

    இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதில் கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் 'எச காத்தா' கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் ராசாதி ராசா இன்று வெளியாகி உள்ளது. இப்பாடல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. யுவபாரதி வரிகளில் மகாலிங்கள், முத்துசிற்பி பாடியுள்ளனர். 



    • அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார்.
    • இன்று 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஆர்யா

    ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.  

    தங்கலான் படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யாவை வைத்து சர்பட்டா-2 படத்தை ரஞ்சித் இயக்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேட்டுவம் படப்பிடிப்பை தொடங்கினார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் 40வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்யாவின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நிகில் முரளி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ், ராஜா ராணிக்கு பிறகு ஆர்யாவிற்கு ஓர் காதல் படத்திற்கு இசையமைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் காதல்கதையை மையமாக கொண்ட படம் என தெரிகிறது. 

    படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • படையப்பா படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
    • படையப்பா படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரஜினி பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது.

    கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

    இந்நிலையில் திரைத்துரையில் ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாளான நாளை படையப்பா படம் ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

    இதனை முன்னிட்டு படையப்பா படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரஜினி பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில், படையப்பா திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த சிறப்பு நேர்காணலின் BTS காட்சியை சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். 

    • 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
    • கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

    இந்நிலையில், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    கடனாக பெற்ற ரூ.21 கோடியை ஞானவேல் ராஜா திருப்பிச் செல்லும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், வா வாத்தியார் திரைப்படத்தை அனைத்து ஓடிடி தளங்களிலும் வெளியிட அனுமதி இல்லை.

    திவாலான தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், நாளை இப்படம் வெளியாக வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    ×