என் மலர்
சினிமா செய்திகள்
2K Love Story படத்தின் "விட்டுக்கொடுத்து போடா" வீடியோ பாடல் வெளியீடு
- இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி".
- இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.
City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி".
2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வைப் பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
வெட்டிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் டி.இமான் இணையும் 10 வது திரைப்படமாகும்.
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
படத்திற்குத் தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் முதல் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான ̀விட்டுக்கொடுத்துப் போடா' வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ஆதித்யா மற்றும் நிகித்தா காந்தி இணைந்து பாடியுள்ளனர். ஒரு ப்ரீ வெட்டிங் வீடியோகிராபி செய்யும் பொழுது எடுக்கப்படும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்