என் மலர்
சினிமா செய்திகள்
சுசீந்திரன் இயக்கியுள்ள '2K Love Story' படத்தின் டிரெய்லர் வெளியானது
- 2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகி உள்ளது.
- இத்திரைப்படம் காதலர் தினமான பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சுசீந்திரன் இயக்கி உள்ள படம் '2K லவ் ஸ்டோரி'. இப்படத்தில் கதாநாயகனாக ஜெகவீர் அறிமுகமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன் , அந்தோணி பாக்யராஜ் , ஜெயப்பிரகாஷ் , வினோதினி வைத்தியநாதன், ஜி. பி. முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகி உள்ளது. மேலும், வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. இத்திரைப்படம் காதலர் தினமான பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை இன்று நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Very happy to share @Dir_Susi's new age #2KLoveStory trailer. Best wishes to the entire team. #2KLoveStoryTrailer ? https://t.co/7ZAE4moufm#2KLoveStoryfrom14thFeb @immancomposer @iamjagaveer @MeenakshiGovin2 @CityLightPics @Dhananjayang @CreativeEnt4 @Vignesh17935… pic.twitter.com/kUDlWGKCit
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) January 22, 2025