search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கள்ள சாவுக்கு... எதுக்கு நல்லச் சாவு-நடிகர் பார்த்திபன் கண்டனம்
    X

    கள்ள சாவுக்கு... எதுக்கு நல்லச் சாவு-நடிகர் பார்த்திபன் கண்டனம்

    • தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.
    • நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசு நிர்வாகத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருப்பதுடன் நேற்று பாதிக் கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறியிருப்பதாவது:-

    கள்ளச் சாவு....க்கு எதுக்கு நல்ல சாவு (ரூ.10 லட்சம்)? என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஜி.வி.பிரகாஷ்

    இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டள்ள பதிவில், காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடு கட்டாது. இனி மரணங்கள் நிகழாத வண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை என பதிவிட்டுள்ளார்.

    தொடர்ந்து இயக்குனர்கள் பா.ரஞ்சித், மோகன்ஜி உள்பட பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு உள்ளனர்.

    Next Story
    ×