என் மலர்
சினிமா செய்திகள்
உங்களுடன் திரையை பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி - அருண் விஜய் நெகிழ்ச்சி
- தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
- திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகியான நித்யாமேனனுடன் தனுஷ் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் அருண் விஜய் குத்து சண்டை வீரராக இருக்கிறார். அவருக்கு உதவி செய்யும் நபராக தனுஷ் அவர் பக்கத்தில் நிற்கிறார்.
இந்த போஸ்டரை வெளியிட்ட தனுஷ் " மிகவும் கடின உழைப்பாளி, தீவிரமாகவும் அர்பணிப்போடு வேலை செய்யும் அருண் விஜய் உடன் வேலை செய்தது நன்றாக இருந்தது" என பதிவிட்டு இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் அருண் விஜய் "அனைவரையும் பிரமிக்க வைக்கும் ஒரு அற்புதமான எண்டர்டெயின்மெண்ட் படத்தில், உங்களுடன் திரையை பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. என்னை வீட்டில் இருப்பதைப் போலவே உணரச் செய்ததற்கு நன்றி தனுஷ்" என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான வணங்கான் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இத்திரைப்படமும் அவருக்கு வெற்றித் தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போஸ்டருக்கு
இப்படம் வெளியாகும் அதே ஏப்ரல் 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.