என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின்
- நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, தர்ஷனுக்கு 6 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
- தர்ஷனின் பாஸ்போர்ட்டை விசாரணை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் தர்ஷன் தனது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதாக கூறி தனது ரசிகரைக் கொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கர்நாடக போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலும் தர்ஷனின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையே, முதுகு தண்டு அறுவை சிகிச்சைக்காக இடைக்கால ஜாமின் கோரி கடந்த மாதம் தர்ஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து கர்நாடகா ஐகோர்ட்டு தர்ஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ஜாமின் மனு நேற்று விசாரித்து முடிக்கப்பட்டது.
இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, தர்ஷனுக்கு 6 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார் , ஒரு வாரத்துக்குள் தர்ஷனின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவும், சிகிச்சைக்கு எவ்வளவு காலம் தேவை என்பதை குறிப்பிடவும் உத்தரவிட்டார். தர்ஷனின் பாஸ்போர்ட்டை விசாரணை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.