என் மலர்
சினிமா செய்திகள்

நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்?

- குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
- குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதுவரை கோலிவுட் திரைப்படங்களில் அதிகபடியான பார்வைகளை பெற்ற டீசராக இப்படத்தின் டீசர் அமைந்துள்ளது.
குட் பேட் அக்லி வெளியான அதே நாளில் தான் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிநேரத்தில் இந்த ரேஸில் இருந்து இட்லி கடை வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.