என் மலர்
சினிமா செய்திகள்
அஜித் என் மேல் கோபமாக இருப்பார்.. இயக்குனர் வெங்கட் பிரபு ஓபன் டாக்
- கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் 53-வது பிறந்தநாளை கொண்டாட மங்காத்தா ரீ - ரிலீஸ் செய்யப்பட்டது.
- மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் சார் படத்தை இயக்க பல முறை வாய்ப்புகள் வந்தன.
காமெடிக் கலந்து வித்தியாசமான கதைக்களத்துடன் படங்களை இயக்கும் வெங்கட் பிரபு அஜித்தை வைத்து இயக்கிய படம் மங்காத்தா. அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலரது நடிப்பில் மங்காத்தா கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மெகாஹிட் ஆனது.
இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.
இதற்கிடையே கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் 53-வது பிறந்தநாளை கொண்டாட மங்காத்தா ரீ - ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் செப்டம்பர் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
வெங்கட் பிரபு அஜித் மீண்டும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்ற ரசிகர்களின் நீண்ட கால விருப்பமாக உள்ள நிலையில் அதுகுறித்து புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. விடாமுயற்சி, குட் பேட் அகலி ஆகிய படங்களின் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் அஜித் அடுத்து எந்த இயக்குனருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் சார் படத்தை இயக்க பல முறை வாய்ப்புகள் வந்தன.
ஆனால் ஏற்கனவே சில படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால் இயக்க முடியவில்லை; அதன் காரணமாக அவர் கோபமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால், அவரது அழைப்புக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.