search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அன்புமணி மகள் சங்கமித்ரா அலங்கு திரைப்படம் மூலம் தயாரிப்பாளராகிறார்
    X

    அன்புமணி மகள் சங்கமித்ரா 'அலங்கு' திரைப்படம் மூலம் தயாரிப்பாளராகிறார்

    • அன்புமணி ராமதாஸ்க்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என 3 மகள்கள் இருக்கிறார்கள்.
    • அலங்கு என்ற திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸின் மனைவியான செளமியா அன்புமணி போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் நேரத்தில் தனது அம்மாவிற்கு ஆதரவாக மகள் சங்கமித்ரா தொடர் பிரச்சாரங்கள் மேற்கொண்டது மக்களிடையே கவனம் பெற்றது.

    அன்புமணி ராமதாஸ் - சவுமியா தம்பதிக்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என 3 மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் சங்கமித்ரா தற்போது அலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது சினிமா தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

    புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் அலங்கு என்ற திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே 'உறுமீன்', 'பயணிகள் கவனிக்கவும்' என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×