என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
ஆந்திரா, தெலங்கானாவிற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய ஜூனியர் என்.டி.ஆர்., பாலய்யா
- கனமழைக்கு ஆந்திராவில் 17 பேரும், தெலுங்கானாவில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.
- இரு மாநிலங்களிலும் பெய்து வரும் கன மழையால் வீடுகள், பயிர்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கனமழைக்கு ஆந்திராவில் 17 பேரும், தெலுங்கானாவில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.
தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
கடந்த 3 நாட்களாக இரு மாநிலங்களிலும் பெய்து வரும் கன மழையால் வீடுகள், பயிர்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கவுள்ளதாக நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான பாலய்யா அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் நன்கொடை வழங்குவதாக தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தெரிவித்திருந்தார்.