என் மலர்
சினிமா செய்திகள்

அறிமுகப்படுத்திய நடிகைகளுடன் ஜோடியாக நடிக்கும் பாரதிராஜா

- இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்டு வருபவர் பாரதிராஜா.
- அவர் அறிமுகம் செய்த நடிகைகள் முன்னணி கதாநாயகிகளாக ஜொலித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்டு வருபவர் பாரதிராஜா. சுமார் 100-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். ராதிகா, ராதா, வடிவுக்கரசி, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ரமா என பல நடிகைகள் பாரதிராஜாவால் அறிமுகம் ஆனவர்களில் முக்கியமானவர்கள்.
அவரது இயக்கத்தில் அறிமுகமான பல நடிகைகள் முன்னணி கதாநாயகிகளாக ஜொலித்துள்ளனர். ஒரு கட்டத்தில் பாரதிராஜா நடிகராக நடிக்கத் தொடங்கினார். அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குனர்கள் பலர் அவரை நடிகராக வைத்து படம் இயக்கி வருகின்றனர்.
மேலும் அவரது மகன் மனோஜ்குமார் இயக்கத்திலேயே பாரதிராஜா நடித்தார். அப்பா மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாரதிராஜா தற்போதுதான் அறிமுகப்படுத்திய நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
சமுத்திரகனி நடிப்பில் வெளியான 'திரு.மாணிக்கம்' படத்தில் பாரதிராஜா மனைவியாக வடிவுக்கரசி நடித்துள்ளார். மேலும் இன்று வெளியாகி இருக்கும் 'நிறம் மாறாத உலகில்' என்ற படத்திலும் பாரதிராஜாவும், வடிவுக்கரசியும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
படத்தில் இருவரது நடிப்பும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் அமைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை படத்தில் 'என் உயிர் தோழன்' நாயகியாக அறிமுகமான ரமா பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அறிமுகப்படுத்திய நடிகைகளுடன் பாரதிராஜா ஜோடியாக நடிக்கத் தொடங்கி இருப்பது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.