என் மலர்
சினிமா செய்திகள்

கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித் குமார்.. திரை பிரபலங்கள் வாழ்த்து
- இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
- அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திரைத் துறையை சேர்ந்தவர்கள் நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Next Story






