என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
ரசவாதி படத்தின் சென்சார் அப்டேட்
- மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார். அடுத்ததாக 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார். அடுத்ததாக 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூபில் இதுவரை 30 லட்ச பார்வையை ரசவாதி டிரைலர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜூன் தாஸ் இப்படத்தில் ஒரு சித்த மருத்துவராக நடித்துள்ளார். ஒரு மருத்துவர் அவரது கோடை விடுமுறையை செலவிடுவதற்காக மலை கிராமத்திற்கு வருகிறார். அதன் பிரகு இவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை பற்றி பேசக்கூடிய படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் படத்தின் பாடலான சாரல் சாரல் பாடல் வெளியாகியது. நேற்று படத்தின் ஸ்னீக் பீக் வெளியிடப்பட்டது. தற்பொழுது சென்சார் போர்ட் ரசவாதி திரைப்படத்திற்கு U/A சான்றிதழை வழங்கியுள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கவின் நடித்துள்ள ஸ்டார் மற்றும் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படமும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.