என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
'குக் வித் கோமாளி சீசன் 5' நிகழ்ச்சியை சிறப்பாக தயாரிக்கும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டூடியோ
- இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் கலந்து கொண்டார்.
- நீக்கப்பட்ட போட்டியாளர் நடுவர்கள் முடிவை ஏற்று நன்றிகூறி விடைபெற்றுக் கொண்டார்.
தொலைக்காட்சி நேயர்களுக்கிடையே தற்போது பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்ச்சியாக இருப்பது விஜய் தொலைக்காட்சியில் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி சீசன் 5.' இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகும்.
இந்நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்பவர் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ். வி.டி.வி. கணேஷ் போன்ற திரைப்பிரபலங்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சியில் அண்மையில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நடிகர் விஜய் சேதுபதி.
அவர் தனது 50-ஆவது படமான 'மகாராஜா' படத்தின் வெற்றியை 'குக் வித் கோமாளி சீசன் 5 குழுவினரோடு கொண்டாடியதும், தானே ஒரு பங்கேற்பாளராக மாறி அனைவருடனும் இயல்பாக உரையாடி மகிழ்ந்ததும் நேயர்களைப் பெரிதும் கவர்ந்தன.
அண்மையில் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற வசந்த் வசி என்கிற போட்டியாளர் நீக்கப்பட்டது சர்ச்சையை உருவாக்கியது. அதிக அளவிலான நேயர்கள் அவர் விலக்கப்பட்டிருக்கக் கூடாது என்று முறையிட்டனர். ஆனால் வசந்த் வசி நடுவர்களின் முடிவை ஏற்று நன்றிகூறி விடைபெற்றுக் கொண்டார்.
தற்போது ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி சீசன் 5' நிகழ்ச்சியை பாக்ஸ் ஆபீஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே 'பிக்பாஸ் ஜோடிகள்', 'கலக்கப்போவது யாரு (சீசன் 5 முதல் 8 வரை) ஆகிய நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளது.
'குக் வித் கோமாளி சீசன் 5' நிழ்ச்சியின் தயாரிப்பாளர் ஜெகன் பாஸ்கரன், இயக்குநர் ஜோஷுவா பிரீதம். இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.