என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![18 நாட்களில் 36 கதாபாத்திரங்கள்... எம்புரான் படக்குழு வெளியிட்ட புது அப்டேட் 18 நாட்களில் 36 கதாபாத்திரங்கள்... எம்புரான் படக்குழு வெளியிட்ட புது அப்டேட்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9074311-empuraan.webp)
18 நாட்களில் 36 கதாபாத்திரங்கள்... 'எம்புரான்' படக்குழு வெளியிட்ட புது அப்டேட்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார்.
- இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார். 'லூசிஃபர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார். அதன்படி இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார்.
இப்படத்தில் பிருத்விராஜ் ராணுவ ஜெனரலாக நடித்துள்ளார். மேலும் இப்படம், வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, நடிகர் டொவினோ தாமஸ் பிறந்தநாளையொட்டி 'எம்புரான்' படத்தில் அவரது கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்து இருந்தது.
இந்த நிலையில், மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை நாளை முதல் படக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது.
நாளை முதல் காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என 18 நாட்களில் 36 கதாபாத்திரங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Step into the world of Empuraan! ⚡ Meet the 36 characters of #L2E and hear the actors share their journey. ? The unveiling spans 18 days, starting tomorrow at 10 AM and 6 PM IST. ⏰#L2E Releasing on 27th March 2025 ?️ @mohanlal @PrithviOfficial #MuraliGopy @LycaProductions… pic.twitter.com/CLh26EalWX
— Lyca Productions (@LycaProductions) February 8, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.