என் மலர்
சினிமா செய்திகள்
நடிகைகள் பட வாய்ப்புகள் பெற்றால் அதுகுறித்தும் தவறாக பேசுகிறார்கள்- வாணி போஜன்
- நட்பு ரீதியாக ஒரு நடிகருடன் பழகினால் அவரோடு தொடர்பு இருப்பதாக பேசுகின்றனர்.
- நான் நடித்த எல்லா ஹீரோக்களுடனும் என்னை இணைத்து பேசி விட்டனர்.
தமிழில் ஓர் இரவு படத்தில் அறிமுகமான வாணி போஜன் தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகைகள் பற்றி தவறாக பேசுவதாக வாணி போஜன் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "சமூக வலைத்தளத்தில் என்னைப் பற்றி வரும் கேலிகளும், வதந்திகளும் எனக்கு அழுத்தம் கொடுக்கவே செய்தன. ஒரு பெரிய படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டதாக ஒரு தகவல் வெளியானது.
அதை பார்த்து பலரும் என்னிடம் துக்கம் விசாரிப்பதுபோல் கேட்டனர். அந்த படத்தில் நீங்கள் நடிக்கவில்லையா? எதற்காக உங்களை நீக்கினார்கள்? என்றெல்லாம் விசாரித்தனர். இதுபோன்ற அழுத்தங்கள் நடிகைகளுக்கு இருக்கத்தான் செய்கிறது.
நடிகைகள் பட வாய்ப்புகள் பெற்றால் அதுகுறித்தும் தவறாக பேசுகிறார்கள். நட்பு ரீதியாக ஒரு நடிகருடன் பழகினால் அவரோடு தொடர்பு இருப்பதாக பேசுகின்றனர். நான் நடித்த எல்லா ஹீரோக்களுடனும் என்னை இணைத்து பேசி விட்டனர். இதுபோன்ற வதந்திகளாலும், கேலிகளாலும் நடிகர்களை விட நடிகைகள்தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்'' என்றார்.