என் மலர்
சினிமா செய்திகள்

விஜய்-க்கு Send Off கொடுக்கும் பிரபல இயக்குனர்கள்

- எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'.
- இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது அதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தை குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர்களான அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஜனநாயகன் படத்தில் வரும் ஒரு பாடலில் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் நடிகர் விஜய்-க்கு செண்ட் ஆஃப் கொடுக்கும் காட்சிகளாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் திரைப்படங்களும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்களும், நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் நடித்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.