search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபாசின் கல்கிக்கு பதிலாக ராஜசேகர் படத்துக்கு டிக்கெட் எடுத்த ரசிகர்கள்
    X

    பிரபாசின் 'கல்கி'க்கு பதிலாக ராஜசேகர் படத்துக்கு டிக்கெட் எடுத்த ரசிகர்கள்

    • பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏ.டி. படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
    • இதனால் ராஜசேகரின் கல்கி திரைப்படம் கிட்டத்தட்ட 20 காட்சிகள் விற்று தீர்ந்து விட்டது.

    பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏ.டி. படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்பட பலர் நடித்துள்ளனர்.

    இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. ஏராளமான ரசிகர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தெலுங்கு ரசிகர்கள் ஒரு சுவாரசிய நிகழ்வை நடத்தியுள்ளனர். கல்கி2898 ஏ.டி என்ற திரைப்படம் வெளியாகும் நாளில் தெலுங்கில் நடிகர் ராஜசேகர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கல்கி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகிறது.

    இதனால் ஏராளமான ரசிகர்கள் பிரபாசின் கல்கி 2898 ஏ.டி.க்கு பதிலாக ராஜசேகர் நடித்த கல்கி படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

    இதனால் ராஜசேகரின் கல்கி திரைப்படம் கிட்டத்தட்ட 20 காட்சிகள் விற்று தீர்ந்து விட்டது.

    இதையடுத்து ராஜசேகர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த முன்பதிவுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை" என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். கல்கி 2898 ஏ.டி திரைப்பட குழுவினருக்கு பாராட்டும் அவரது வாழ்த்தையும் பதிவிட்டுள்ளார்.

    இது குறித்து `புக் மை ஷோ' நிறுவனம் ஒரு பதிவை பதிவிட்டுள்ளனர். யாரும் கவலைக் கொள்ள வேணாம், யாரெல்laaம் ராஜசேகரின் கல்கி திரைப்படத்திற்கு தவறுதலாக புக் செய்யப்பட்டதோ அவர்களக்கு பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படத்திற்கு பதிவு செய்யப்படும், இந்த பிரச்சனையை விரைவில் சரிசெய்யப்படும் என அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×