என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
ஜி.வி. பிரகாஷ் குரலில் குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தில் முதல் பாடல் வெளியீடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- யோகி பாபு அடுத்ததாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவியது. '
மடோன் அஸ்வின் அறிமுக படமான மண்டேலா படத்தில் யோகிபாபு தான் ஒரு சிறந்த காமெடியன் மட்டுமில்லாமல் சிறந்த நடிகன் என்று நிருபித்தார். அதற்கடுத்து அவர் தமிழில் பலப்படங்கள் நடித்துள்ளார். ஜெயிலர், ஜவான், அயலான்,சைரன், மாவீரன், டக்கர் என பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்.
இந்நிலையில் யோகிபாபு அடுத்தக்கட்டமாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார். படத்தின் முதல் பாடலான பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ஜிவி பிரகாஷ் குமார் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இப்பாடலை ஜிவி பிரகாஷ் குமார் பாடியுள்ளார்.
பாடலின் வரிகளை ஷங்கர் தயால் எழுதியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.