என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
வசூலில் மீண்டும் சொல்லி அடித்த 'கில்லி'
- இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது.
- தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திரைக்கு வந்த படம் கில்லி.
தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திரைக்கு வந்த படம் கில்லி. படத்தில் வேலு கதாபாத்திரத்தில் விஜய்யும் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷாவும் முத்துப்பாண்டியாக பிரகாஷ்ராஜும் நடித்திருந்தனர்.
கில்லி படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் 50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது. படம் வெளியாகி உள்ள திரையரங்குகள் அனைத்திலும் சில தினங்களுக்கு டிக்கெட் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
கில்லி படம் மறு வெளியீடு பற்றி நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-வாழ்க்கை மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கிறது என்பதை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது என பதிவிட்டுள்ளார்.
படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் அனுபவத்தையும் , ஆடிய ஆட்டத்தையும் , விஜயின் ரசிகர்கள் பல கில்லி படத்தை இப்பொழுது தான் முதன்முறையாக தியேட்டரில் பார்க்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு வெளியான போது படத்திற்கு எத்தகைய வரவேற்பு கிடைத்ததோ அதே அளவு 20 ஆண்டுகளுக்கு பிறகும் வரவேற்பை பெற்றது.
கடந்த சில மாதங்களாகவே பல படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் எந்த படத்திற்கும் கில்லி படத்தின் அளவிற்கு வரவேற்பு இல்லை. படம் ரீரிலீஸ் செய்த முதல் நாள் வசூல் 10 கோடியை தாண்டியுள்ளது. தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளம், சிங்கபூர், ஃப்ரான்ஸ் மற்றும் பல நாடுகளில் படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது. படம் இன்னும் சில நாட்களில் வசூல் ரீதியாக பெருமளவு வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்