என் மலர்
சினிமா செய்திகள்
கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா - புது அப்டேட்
- கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
- தி கோட் படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகள் லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
விஜய் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் 2-வது பாடலான சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
தி கோட் படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகள் லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் விழாவை நடத்த படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் அமைப்பை தொடங்கி கலந்து கொள்ளும் முதல் இசை விழா என்பதால் விழாவில் என்ன பேசப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.