search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    Feel Like நான் தான் அஜித்தே - Certified Self Made பாடலை வெளியிட்டார் ஹிப்ஹாப் தமிழா

    • தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹிப்ஹாப் தமிழா.
    • இந்நிலையில் ஹிப்ஹாப் தமிழா புதிய இண்டிபெண்டண்ட் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹிப்ஹாப் தமிழா. இசையமைப்பது மட்டுமல்லாமல் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு இயக்கி நடித்து தயாரித்த திரைப்படம் கடைசி உலகப்போர் இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து இருந்தார்.

    இந்நிலையில் ஹிப்ஹாப் தமிழா புதிய இண்டிபெண்டண்ட் பாடல் ஒன்றை இசையமைத்து வெளியிட்டுள்ளார். இதன் லிரிக் வீடியோ இன்று வெளியானது. இப்பாடலிற்கு Certified Self Made என தலைப்பு வைத்துள்ளனர். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலின் வரிகளை ஹிப்ஹாப் தமிழா எழுதியுள்ளார்.

    இப்பாடலில் நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசும் சில வரிகள் இடம் பெற்றுள்ளது பாடலின் ஹைலைட். இப்பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×