என் மலர்
சினிமா செய்திகள்

கண்ணாடியை பார்த்து என்னை நானே கன்னத்தில் அறைந்து கொண்டேன் - ரூ.100 கோடி பட வாய்ப்பு 'கோவிந்தா'

- ஜேம்ஸ் கேமரூன் எடுத்த அவதார் படத்தில் கதாநாயகனாகத் தன்னை நடிக்க அழைத்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
- சக்தி மான் நடிகர் முகேஷ் கன்னாவிடம் கோவிந்தா இண்டர்வியூ செய்தார்.
90களில் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் கோவிந்தா. தற்போது 61 வயதாகும் கோவிந்தா பாலிவுட் வட்டாரங்களில் தனது அனுபவங்களைப் பற்றி பிரஸ்தாபித்து வருகிறார்.
அவ்வப்போது தனது கருத்துக்களுக்காக சினிமா பத்திரிகைகளின் முதல் பக்கத்திலும் இடம் பிடிப்பார். அப்படிதான் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் எடுத்த அவதார் படத்தில் கதாநாயகனாகத் தன்னை நடிக்க அழைத்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறி டிராலுக்கு உள்ளானார்.
ஆனால் கோவிந்தா 90 களில் மார்க்கெட் உள்ள கதாநாயகன் என்பதையும் மறுக்க முடியாது.
இந்நிலையில் தனக்கு வந்த ரூ.100 கோடி பட்ஜெட் பட வாய்ப்பை மறுத்ததற்காக கண்ணாடியில் பார்த்து என்னை நானே அறைந்து கொண்டேன் என்று கோவிந்தா உச் கொட்டியுள்ளார்.
பீஷ்ம் இன்டர்நேஷனல் என்ற தனது யூடியூப் சேனலில் சக்தி மான் நடிகர் முகேஷ் கன்னாவிடம் பேசிய கோவிந்தா, ரூ.100 கோடி படத்தை நிராகரித்ததற்காக வருத்தப்படுகிறேன். எனக்கு வேலை இல்லை என்று அவர்கள்(பத்திரிகைகள்) எழுதுகிறார்கள். நானோ ரூ.100 கோடி படத்தை விட்டுவிட்டேன்.
இதற்காக நான் என்னை கண்ணாடியில் பார்த்து அந்த பிராஜெக்டை மறுத்ததற்காக என்னை நானே அறைந்து கொண்டேன் என்று கூறினார். இந்த காலத்தில் கிளிக் ஆகும் பாத்திரம் இந்தப் படத்தில் இருந்தது என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.