என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
`இவங்களுக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்ல மாட்டேன்' - தனுஷை சாடினாரா? சிவகார்த்திகேயன்
- இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.
- எஸ்.கே ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் இருந்து இன்னும் இம்மாதிரியான படைப்புகள் வரும்.
கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் படக்குழு மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். மேலும் இவ்விழாவில் இயக்குனர் மிஷ்கின், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி கலந்துக் கொண்டனர்.
விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது " கூழாங்கல் திரைப்படம் பார்த்துவிட்டு, எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை பின அதை பற்றி பேசி புரிந்துக்கொண்டேன். இப்படத்தின் கதையை கேட்காமல் நான் இப்படம் தயாரிக்க சம்மதித்தேன் காரணம் இயக்குனர் வினோத்ராஜ். இப்படம் எடுத்ததற்கான காரணம் முதலில் வினோத் ராஜை கொண்டாடத்தான். இப்படம் லாபம் சம்பாதித்தால் அதை மீண்டும் வினோத்ராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்திற்கு முன்பணமாக கொடுப்பேன். மிகப்பெரிய லாபம் கிடைத்தால் வினோத்ராஜ் போல் இன்னும் சில இயக்குனர்களை சினிமாவிற்கு அறிமுகப் படுத்துவேன்.
என் வாழ்க்கையை அமைத்து கொடுத்த இந்த சினிமாவிற்கு நான் செய்யும் சேவைகளாக இதுப்போன்ற படங்களை தயாரிக்க நான் நினைக்கிறேன். சூரி அண்ணனுக்கு இந்தாண்டு மிகப்பெரிய ஆண்டாக அமைந்துள்ளது. கொட்டுக்காளி திரைப்படத்திற்காக சிறந்த நடிகன் விருதை வாங்குவார் என நம்பிக்கை இருக்கிறது.
இப்படத்திற்கு ஆதரவு கொடுத்து வெற்றி படமாக அமைந்தால். எஸ்.கே ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் இருந்து இன்னும் இம்மாதிரியான படைப்புகள் வரும். நான் யாரையும் கண்டு பிடிச்சு இவங்களுக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன், வாழ்க்கை கொடுத்தேன் என நான் சொல்ல மாட்டேன். ஏனா என்னை அப்ப்டி சொல்லி சொல்லி பழக்கிவிட்டார்கள். விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார்.
இவர் கூறிய இந்த வாக்கியம் நடிகர் தனுஷை மறைமுகமாக சாடினாரா? இல்லை விஜய் டிவியை கூறுகிறாரா? என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்து இணையத்தில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்