என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
நேரம் வரும்போது திரும்ப வருவேன்.. நடிப்பில் இருந்து விலகுவது தாற்காலிகம்தான் - விக்ராந்த் மாஸ்ஸி
- தனது பதிவை பலர் தவறாக புரிந்துகொண்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
- கடந்த 2 படங்கள் எனக்கு பல வருட நினைவுகளை கொடுத்துள்ளது.
விது வினோத் சோப்ராவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வசூலை குவித்த படம் '12வது ஃபெயில் (12th Fail).இப்படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸி-க்கு இந்த படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
தனது நடிப்பின் மூலம் பலரது மனதில் இடம் பிடித்துள்ள விக்ராந்த், கடைசியாக சபர்மதி ரிப்போர்ட் படத்தின் நடித்திருந்த இவர் சினிமாவை விட்டு விலகுவது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் 2025 ஆம் ஆண்டு அவரது கடைசி படத்தை நடிக்கவுள்ளதாக அறிவித்தார்.
அவரது பதிவில், கடந்த சில வருடங்களும் அதற்குப் பின்னரும் தனித்தன்மை வாய்ந்தவை. உங்களது அழியாத ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள்.
ஆனால் நான் முன்னோக்கிச் செல்லும்போது, மறுபரிசீலனை செய்து வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரத்தை நான் உணர்கிறேன். கணவன், தந்தை மற்றும் மகனாக. மேலும் ஒரு நடிகராகவும். எனவே வரும் 2025ல், கடைசியாக ஒருமுறை மீண்டும் சந்திப்போம். காலம் சரியாக இருக்கும் வரை. கடந்த 2 படங்கள் எனக்கு பல வருட நினைவுகளை கொடுத்துள்ளது. மீண்டும் நன்றி. என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் தற்காலிகமாக மட்டுமே ஓய்வு பெறுகிறேன் என்றும் தனது பதிவை பலர் தவறாக புரிந்துகொண்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
எனக்கு தெரிந்ததெல்லாம் நடிப்பது மட்டும்தான். இப்போது என்னிடம் உள்ள அனைத்தையும் அது எனக்கு கொடுத்தது. ஆனால் எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. எனது குடும்பம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்குச் சிறிது ஓய்வு எடுக்க விரும்புகிறேன்.
இந்த நேரத்தில், நான் என்னை முழுமையாக உணர்கிறேன். நடிப்பிலிருந்து விலகுவது அல்லது ஓய்வு பெறுவது என எனது பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. எனக்கு நேரம் தேவை, ஆனால் நேரம் சரியாக இருக்கும் போது நான் திரும்பி வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்